search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் குமார்"

    சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் நடித்து இயக்கி இருக்கும் ‘உறியடி 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Uriyadi2 #Uriyadi2ReleaseDate
    `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

    அதையும் விஜய்குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.



    விஜய்குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளதாக படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய் குமார் கூறினார். #Uriyadi2 #VijayKumar
    இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகினாலும், தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடி படத்தில் பேசிய சாதிய அரசியலை, இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 படங்கள் பற்றி பேசினார்.

    "தற்போதைய சமூகத்தில் சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம். எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளது.



    இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். உறியடியில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணிபுரிந்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. #Uriyadi2 #VijayKumar

    சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் ‘உறியடி 2’ படத்தின் படப்பிடிப்பை 36 நாட்களில் இயக்குனர் விஜய்குமார் முடித்திருக்கிறார். #Uriyadi2 #Uriyadi2WrapUp
    `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

    அதையும் விஜய்குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.

    விஜய்குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 36 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முழு படத்தையும் முடித்திருக்கிறார். 

    விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ள கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரவீண் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லினு என்ற புதுமுகம் படத்தொகுப்பையும், ஏழுமலை ஆதிகேசவன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துடன் இந்தப்படம் உருவாகி இருக்கிறது. #Uriyadi2 #Uriyadi2WrapUp
    கேஎஸ்எஸ் மெமோரியல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஓம் பிரகாஷ் மிதர்வால், விஜய் குமார் தலா இரண்டு தங்கம் வென்றனர். #Shooting
    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கேஎஸ்எஸ் மெமோரியல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்ற வருகிறது. ஆண்களுக்காக 50மீ ப்ரீ பிஸ்டர் பிரிவில் ஓம்பிரகாஷ் மிதர்வால் 560 புள்ளிகள் பெற்ற தங்கப்பதக்கம் வென்றார். 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஓம்காம் சிங் 559 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 553 புள்ளிகளுடன் குர்பால் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.

    50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் ஓம் பிரகாஷ், குர்பால் கிங், ஜெய்ன் சிங் அணி 1654 பள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. மோனு தோமர் தலைமையிலான அணி 1641 புள்ளிகள் பெற்றி 2-வது இடமும், ஓம்கார் சிங் அணி 1626 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தது.


    விஜய் குமார்

    50மீ பிஸ்டல் ஜூனியர் பிரிவில் அன்மோல் ஜெய்ன் தங்கமும், சுரிந்தர் சிங் வெள்ளியும், சுராஜ் பாம்பானி வெண்கலமும் வென்றனர். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், 25மீ சென்டர் பையர் தனிப்பிரிவு மற்றும் அணிப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
    ×